எங்கள் ஊழியங்கள்
சிறுவர் ஊழியம்
சிறுவர்களின் விசுவாசமும், நற்குணமும், ஜெப வாழ்க்கையும் வளர தங்கள் நேரத்தைச் செலவிடும் ஆர்வமுள்ளவர்கள் எங்கள் சபையில் உண்டு. வழக்கமான சிறுவர் ஆராதனை, சபை ஆராதனை முடிந்த பின் நடைபெறும். வருடத்தில் விடுமுறை வேதாகமப் பள்ளியும் நடைபெறும்; அதில் பிள்ளைகள் மகிழ்ச்சியோடு கற்று, விசுவாசத்தில் வளருகிறார்கள்.
வாலிபர் ஊழியம்
ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு காலை 9:00 முதல் 10:00 மணி வரை வாலிபர் கூட்டம் நடைபெறும். வழக்கமான ஆராதனை நேரங்களுக்குப் பின்பும் வாலிபர்கள் கூடுகிறார்கள்.
சகோதரிகள் ஊழியம்
எங்கள் சகோதரிகள் வாரம் ஒருமுறை கூடி, மன்றாட்டு ஜெபத்திலும், ஆராதனையிலும், கர்த்தருடைய வசனத்தைத் தியானிப்பதிலும் நேரம் செலவிடுகிறார்கள்.
யாதா
யாதா பாடல்களை யாதா YouTube சேனலில் கேட்கலாம்.